மதுரை, சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்….

மதுரை, சித்திரை திருவிழா விற்காக அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த கள்ளழக ருக்கு வீதிகள் தோறும் ஆடி, பாடி பக்தர்கள் வர வேற்பு அளித்த எதிர் சேவை நேற்று நடந்தது. இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.தல்லாகுளம் கருப்பண சாமி கோவிலுக்கு வந்து, தங் கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் 3 மணி அளவில் தங்கக்கு திரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.
இன்று காலை தங்கக் குதிரை யில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவ கங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரையில் குவிந்தனர்.
டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ் லைன், ரேஸ்கோர்ஸ், அவுட் போஸ்ட் பகுதிகளில் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாக னத்தில் எழுந்தருளினார். – இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலையை – அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணி அளமாநகரில் குவிந்து உள்ளனர்.
இதனால் மதுரை மாநக ரம் விழாக்கோலம் பூண்டுள்ளது வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழ கர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலி னால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்க டன் செலுத்தினர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறை வேற்ற முடி காணிக்கை செலுத்தினர்..
வைகையில் இறங்கியபின், பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் சென்றார்.அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.