வலங்கைமானில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71- வது பிறந்த நாளையொட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71-வது பிறந்த நாளையொட்டி, கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் வழிக்காட்டலின் படி, வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றியம், நகரம் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பொது மக்களுக்கு விஜிடேபிள் பிரியாணியும், சர்க்கரை பொங்கலும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அஇஅதிமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் கேத்தனூர் யூ.இளவரசன், நகரச் செயலாளர் சா.குணசேகரன், பொதுக் குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ‌ஜெய.இளங்கோவன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர். ஜி.பாலா, தொழவூர் முனுசாமி,நகர அவைத் தலைவர் ரத்னகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *