பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு செய்து வரும் திட்டங்கள் அதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து விளக்கி பேசப்பட்டது இந்த கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சரவணக்குமார் தலைமை கழக பேச்சாளர்
ஜ. சக்திவேல் பெரியகுளம் நகர திமுக செயலாளர் முகமது இலியாஸ் மாவட்ட அவைத் தலைவர் பி.டி. செல்லபாண்டியன் பெரிய மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணையன் நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நகரச் செயலாளர் முகமது இலியாஸ் நன்றி கூறினார்