திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபக்தவச்சல பெருமாள் ஆலயம்வைணவ ஸ்தலங்களில் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தது. இவ்வாலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா
கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றுடன் தொடங்கியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக சித்ரா பெளர்ணமியையொட்டி தேரோட்டம் இன்று காலை தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேரில் பவனி வரும் ஸ்ரீ பக்தவச்ல பெருமாள் ஆலயத்தின் பிரதான 4 வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தவச்சலா கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி ஆர்வத்துடன் நான்கு வீதிகளையும் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
இதில் தீயணைப்பு துறையினர் காவல்துறை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ராஜ்குமார்
கணக்கர் கோபிநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கிராமவாசிகள் நடைபெற்றது.