திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆனது திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலங்குடியில் பொதுக் கூட்டமானது கட்சியின் மாவட்ட செயலாளரும், எம் எல் ஏ வுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், பொதுக் குழு உறுப்பினர் வி.பிரிதிவிராஜன், வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவநேசன், ஒன்றிய அவைத் தலைவர் ஆர். கேசவன், துணைச் செயலாளர்கள் வி. கோபால், என்.ஞானசேகரன், அமுதாதமிழரசன், பொருளாளர் நல்லம்பூர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் ஜி. விஜயபாஸ்கரன், ஆர்.செல்வகுமார், பி.கரிகாலன், ஆலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ. எம். மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் தலைமை கழக சொற்பொழிவாளர் நாகை மு. சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சு. இரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.