திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பட்டாதாரி மாணவர்களுக்கான 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்டிட பொறியியல், இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சேர்ந்த சுமார் 159 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர்.

இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கட்டிடப் பொறியியல் துறையில் இருந்து மூன்று இளநிலை மாணவர்கள் மின் மற்றும் மின்னணு துறையில் இருந்து நான்கு இளநிலை மாணவர்கள் இயந்திரப் பொறியியல் துறையில் இருந்து நான்கு இளநிலை மாணவர்கள் என மொத்தமாக 11 மாணவர்கள் இடம் பெற்றனர். அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.


CD Techno Tex LLP, ஈரோடு நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வரன் என்கின்ற CD குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார். இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் தனலட்சுமி அம்மாள், முதன்மைத் தலைவர் R. S. K. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் வெங்கடேஸ்வரன் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் வளாக வேலைவாய்ப்பில் தங்கள் படிப்பு முடியும் முன்பே கட்டிட பொறியியல், இயந்திரப் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைகளைச் சேர்ந்த சுமார் 180 மாணவ மாணவிகள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் இறுதியில் பி எஸ் என் ஏ கல்லூரி நிர்வாகம் பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக் கொண்டது.