சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கீழத்தெரு மஹா மாரியம்மன் ஆலய சித்திரைப் பெருவிழா.ஏராளமானோர் பால் குடம், பால் காவடி,அலகு காவடி எடுத்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் கீழத்தெருவில் தருமபுர ஆதினம் வேளூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
94 ம் ஆண்டு சித்திரை திருவிழாவனது 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.சித்திரா பௌர்ணமியான இன்று மகா மாரியம்மனுக்கு காப்பு கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் 808 பால் குடங்கள்,பால் காவடி,அலகு காவடிகள் எடுத்தும்,மாவிளக்கிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.பக்தர்கள் கொண்டு வந்த பாலை மஹா மாரியம்மனுக்கு பாலபிஷேகமும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து நவசக்தி அர்ச்சனை நடைபெற்றது.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.