திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உயர் கல்வித்துறையின் அரசாணை எண் 4, தேதியிட்ட 05.01.2016- ன் படி எங்கள் கல்லூரி வலங்கைமானில் நிறுவப்பட்டு, வகுப்புகள் 05.08.2016 அன்று தொடங்கப்பட்டன. தற்போது எங்கள் கல்லூரி வலங்கைமான் அருகே தொழவூரில் 19.08.2017 முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது,

தமிழ் நாட்டின் சிறந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்றாக, ஒவ்வொரு gpuptp லும் அனுமதிக்கப்பட்ட 60 இடங்கள் காலியாக இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகின்றன. 2024- 2025 ஆம் ஆண்டில் முதலாமாண்டில் 300 இடங்களில் 283 இடங்களும், இரண்டாம் ஆண்டில் 68 இடங்களும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி நிரப்பப்பட்டன. எங்கள் கல்லூரியில் மாணவர் சமூகத்திற்கு பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

93% க்கும் மேற்பட்ட மாணவர்கள் (729) இலவச பேருந்து பயணச்சீட்டு வசதியைப் பெறுகின்றனர். இந்த ஆண்டு (2024-25), 516 மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிலிருந்து ரூ.13,41,410 உதவித் தொகையாக விநியோகிக்கப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து 173 மாணவர்களுக்கு ரூ. 23,74,254 உதவித்தொகை அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 29 மாணவிகள் மாதம் ரூ.1000/- பெறுகின்றனர். 20 மாணவர்களுக்கு பிரகதி உதவித்தொகை வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒவ்வொரு மாணவருக்கும் இந்த ஆண்டு ரூ. 50,000/- கிடைக்கும். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 418 மாணவர்கள் படைந்துள்ளனர்,

அதே சமயம் நான் முதல்வன் திட்டத்தில் 498 மாணவர்கள் படைந்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டில் மாணவர்களின் நலனுக்காக சிறப்புக் கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணங்களிலிருந்து ரூ. 30 லட்சம் செலவிடப்பட்டது. கிட்டத்தட்ட 85% மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.மீதமுள்ள மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சில மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். உடல் ஊனமுற்றவர்களுக்கு மின் தூக்கி (லிஃப்ட்) வசதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இருவருக்கும் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அனைத்து மாணவர்களும் தங்கள் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை மேம்படுத்த பல மன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த ஆண்டு (2024-25) ஜபிஏஏ மாநில அளவிலான போட்டிகளை எங்கள் கல்லூரி நடத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பிரிவுகளைச் சேர்ந்த பல கல்லூரிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றன.

இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கும் விழா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வலங்கைமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்தக் கல்லூரி ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். ஒவ்வொரு மாணவரின் படிப்பை முடிக்க ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக அரசு செலவிடுகிறது.

ஒரு மாணவரை ஒரு பொறியலாளராகவும், திறமையான நபராகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதராகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். எனவே வருகின்ற 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை 07.05.2025 முதல் தொடங்கி 23.05.2025 இறுதி நாளாகும் எனவே மாணவர்கள் உடனடியாக சேர்க்கையில் சேர்ந்து பயனடைய வேண்டுகிறோம் என கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *