தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் பங்கேற்ற கனிமொழி கருணாநிதி எம்பிக்கு போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஏலம் மணக்கும் போடியில் அதனை பறைசாற்றும் விதமாக ஏலக்காய் மாலை கொடுத்து மரியாதை செய்தார் உடன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.