மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும், ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் மயிலாடுதுறையில் பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பாஜக மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி பங்கேற்று, பஹல்காம் தாக்குதலை கண்டித்து பேசினார். தொடர்ந்து அக்கட்சியினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.