காரைக்கால் பாரதியார் சாலையில், திருநள்ளாறு சாலை சந்திப்பு அருகே பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம் அடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் கடற்கரை செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாதை அருகில் இருந்த பந்தலும் விழுந்ததால் பேருந்து மற்றும் கார் போக்குவரத்து வெகு நேரம் பாதிக்கப்பட்டது.
ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் உள்ள பொதுப்பணி துறை மக்கள் மீது வைத்திருக்கும் அக்கரையை இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.
பொறியியல் நிபுணத்துவம் பயின்ற பொதுப்பணி துறை அதிகாரிகளின் கூர்மையான ஞானமும், பொது அறிவும் ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றால் மழுங்கியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போல விபத்து நிகழாமல் தடுப்பதில் கவனக்குறைவு, போதிய பாதுகாப்பு அம்சங்களை தவறவிட்டது,
பணியில் அலட்சியம் ஆகியவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நன்னடத்தைக்கு குந்தகம் விளைவித்துள்ளது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.