சீர்காழி அருகே கனமழை மற்றும் சூரக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 1.50 லட்சம் வாழை முறிந்து நாசம்,உரிய கணக்கெடுப்பு செய்து விரைந்து நிவாரணம் வழங்க வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு,இராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் பயிரிட்டுள்ளனர். பத்து மாத பயிரான இந்த வாழை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அடித்த பலத்த சூராவளி காற்று மற்றும் கனமழையால் வாழை முற்றிலும் அழிவை சந்தித்துள்ளது,
ஒரு ஏக்கருக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர், மழையால் பாதித்த பகுதியை சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதே போல மா மரங்கள்,புளியமரம் சுமார் 50 ஏக்கர் அளவில் மரம் முறிந்து அழிவை சந்தித்துள்ளதால் அதற்கான நிவாரணமும் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்