ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு வழக்கறிஞர் குமரன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதன்படி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு இலவச தையல் மெஷின் தள்ளுவண்டி மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளும் வழங்கப்பட்டது.