விருத்தாசலம்,
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கட்டைப்பை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் வந்தபோது அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் எம் பரூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா 29 என்பதும், அவர் கட்டைப்பையில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடன் போலீசார் அவரை பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த நான்கு லிட்டர் அளவிலான 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.