நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரிசல் பட்டி மு.சுந்தராஜன் தலைமையில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜெயலட்சுமி கலந்து கொண்டார். இந்த மாத கூட்டத்தை மோசஸ் மங்கள் ராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வாழ்த்துரை வழங்கினார். சமூக சேவகர் ஒ.கே.சிவா, நடிகர் மீசை மனோகரன், பட்டிமன்ற நடுவர் சுகுமாரி, மற்றும் கவிஞர்கள், நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் நடிகர் அப்பா பாலாஜி நன்றி கூறினார்.