தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி வெள்ளானூர் சமுதாய கூடத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய கழக நிர்வாகிகள் மணிமாறன், லோகேஷ், சசி, மனோஜ், சந்தியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.பிரபு கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் சிவா, அஜய், தமிழ், சுஜாமணி, இளையவானி, திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுந்தர், ராபின், தீபக், தமிழ் பாரதி, ரோகா மற்றும் வெள்ளானூர் ஊராட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தனர்.