வாடிப்பட்டி செய்தியாளர் தி.உதயசூரியன்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் குளுமை சாட்டுதல் மற்றும் சித்திரை பெருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் அம்மன் கரகம் அலங்கரித்து ஊர்வலம் வருதல்,அம்மன் கிரிஜோதி ஏற்றுதல், நள்ளிரவு காவல் தெய்வம் கருப்புச்சாமி நகர்வலம் வருதல் நடைபெற்றது.
இரண்டாம் நாள் அதிகாலை முளைப்பாரி ஊர்வலம், அம்மனுக்கு பொங்கல் வைத்து முடி காணிக்கை, மாவிளக்கு,பால்குடம், அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் சென்று அம்மன் கரகம் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் காளியம்மனுக்கு குழுமை சாட்டுதல் மற்றும் கிடாய்,சேவல் பலியிட்டு பொதுமக்களுக்கு பானகம், கூல், நீர் மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் மஞ்சள் நீராட்டுடன் இந்த விழா நிறைவு பெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை சத்திர வெள்ளாளப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.