வீட்ஸ் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம்
25 வது ஆண்டு விழா.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சியில் இல்லீடு கிராமத்தில் செயல்பட்டு வரும் வீட்ஸ் தொண்டு நிறுவனம் மட்டும் திறன் பயிற்சி நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஏழைகளுக்கு அன்னதானம் வேட்டி சட்டை சேலை வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் டாக்டர் கோபுரராஜ் தலைமையில் 25 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் வரவைத்து அனைவருக்கும்
மரியாதை செய்தார்.
இவ்விழாவில் சித்தாமூர் அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மேல்மருவத்தூர் பூபதி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் எஸ்.ராஜசேகர்
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் எம்.குணசேகரன்
சித்தாமூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சபரிநாதன் மற்றும் விஜயன் உதயமணி வேலு ஊராட்சி அலுவலர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பார்கவி ஆராயி காசி அம்மாள் தேவகி இன்பவள்ளி கனகா மற்றும் கயப்பாக்கம் தமிழ்ச்செல்வி எரவாநல்லூர் அருணா மேலவளம்பேட்டை திவ்யா பிரபாவதி மற்றும் திறன் பயிற்சி பயிற்றுநர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரளா தொண்டு நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் பொருளாளர் எஸ்.பத்மாவதி அனைவருக்கும்
நன்றி தெரிவித்தார்.