செங்கல்பட்டு மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் செயற்குழு கூட்டத்தில் காஷ்மீரில் இறந்த 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மேல்மருவத்தூர் தனியார் மண்டபத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு கவுன்சில் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில இணை செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காஷ்மீரில் தீவிரவாதிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர். பின்பு 300 நபர்களுக்கு தேசிய தலைவர் தமிழன்ஜெகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி எழுச்சி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் ராஜேஷ், சுதாகர், ஸ்ரீதர், கனிமொழி முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச் செயலாளர் சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி கண்ணன், தேசிய பொருளாளர் குரு, தேசிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் எழிலரசன், மாநில செயலாளர் சத்தியசீலன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் செங்கல்பட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.