தென்காசி,
தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் அதிமுக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவுபடி திமுக அமைச்சர் பொன்முடி யை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமானசெ .கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட மகளிரணி சார்பில் புளியங்குடி காமராஜர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் சத்யா தீபக் தலைமை தாங்கினார்.அதிமுக மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் துரையப்பா, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த், மாவட்ட அதிமுக அவைத்தலைவர் வி பி மூர்த்தி, அதிமுக மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, மாவட்ட கழக துணை செயலாளர்கள் பொய்கை சோ மாரியப்பன், சகுந்தலா தனபால், பொருளாளர் சண்முகையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புளியங்குடி நகர அதிமுக செயலாளர் சங்கரபாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இவர் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் முன்னிலையில் பெண்களை மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இனி எந்த அமைச்சரும் இது போல் பேசக்கூடாது என்று கண்டன உரை நிகழ்த்தப்பட்டு இறுதியாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, ராமசாமி என்ற ரவி, சந்திரன், சத்யகலா பாலசுப்பிரமணியன், பரமகுருநாதன், வழக்கறிஞர் சுப்பிரமணியன், குட்டி மாரியப்பன், டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், சங்கரசுப்பிரமணியன், மகாதேவன், குருசேவ், மதன், தீக்கனல் லெட்சுமணன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், பெரியதுரை, ஜெயகுமார், பொன் முத்துவேல் சாமி, ராம்துரை, குருக்கள்பட்டி செல்வராஜ், துரைபாண்டியன், இளசை தேவராஜ், ரவிச்சந்திரன், மகாராஜன், ரமேஷ், அடைக்கலாபுரம் செல்வராஜ், வேல்முருகன், ராமச்சந்திரன், நகர கழக செயலாளர் எம் கே முருகன், ஆறுமுகம், கணேசன், பேரூர் கழக செயலாளர்கள் சுதாகர், சேவகபாண்டியன், மாடசாமி, முத்துக்குட்டி, பாலசுப்பிரமணியன்,அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ஆத்மநாதன் மாவட்ட மகளிரணி தலைவர் அமுதா பாலசுப்பிரமணியன், துணை தலைவர்கள் கோமதி, சுந்தரி, இணை செயலாளர்கள் ஐஸ்வர்யா, சமுத்திரம், சுமதி கண்ணன், துணை செயலாளர்கள் குருப்ரியா, செல்லம்மாள், பாக்யம், ஈஸ்வரி, ராமலெட்சுமி, பொருளாளர் நிர்மலாதேவி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட மகளிரணி துணை தலைவர் கோமதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்