திருப்பூர் மாவட்டம் தாராபுரம்
செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற கோரியும் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தாராபுரம் அண்ணா சிலை அருகே மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.