கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் பேஷன் ஷோ-ஆறாவது சீசனாக நடைபெற்ற இதில் அசத்தலாக கேட்வாக் நடத்திய பெண்கள்
கோவையில் ஐடியா மேக்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் அசத்தலாக உடை அணிந்த பெண்கள் ஸ்டைலாக நடந்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தனர்…
கோவையில் செயல்பட்டு வரும் ஐடியா மேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனம் பேஷன் டிசைனிங்,இன்டீரியர் டிசைன்,கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் சார்ந்த துறைகளின் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்..
இந்நிலையில் ஃபேஷன் துறை சார்ந்த பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றனர்..
அதன்படி ஆறாவது சீசனாக கோவை கொடிசியா அரங்கில் கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது..
இதில் ஐடியா மேக்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் பெண்கள் தாங்களே உருவாக்கிய டிசைன் ஆடைகளை அணிந்த மாடல் அழகிகள் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்..
இது குறித்து ஐடியா மேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் கணபதி கூறுகையில்,எங்களது மையத்தில் பயிற்சி பெறும் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும்,கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஐடியா மேக்ஸ் பயிற்சி மையம் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்..
இளம் தொழில் முனைவோர்களான பெண்கள் தயாரித்த ஆடைகளை அணிந்து நடைபெற்ற ஐடியா மேக்ஸ் பேஷன் ஷோ பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தது..