திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நஞ்சியம்பாளையம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டப்படும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் SDAT ஸ்டார் இறகுபந்து அகாடமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி பங்கேற்றார்.
அப்போது ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மேலும் ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு தேர்வான பயிற்றுநர் அவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் .ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் பத்மநாபன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.