கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம்

அறிவியல், பாரம்பரியம்,ஆரோக்கியம் ,சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளையும் கண்முன்னே நிறுத்திய அசத்தலான கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) கண்காட்சி

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) எனும் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் துவங்கி பனிரெண்டாம் வகுப்பு பயலும் மாணவ,மாணவிகள் ஒருங்கிணைத்த இந்த கண்காட்சியை பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்…

இதில் மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளில் தங்களது படைப்புகளை காட்சி படுத்தினர் குறிப்பாக செயற்கை வனம்,மூலிகை தாவரங்கள்,மண்பாண்டம் உருவாக்குவதல்,சோலார் ஓவன்,ரோபோட்டிக் அறிவியல் ,ஓவியம்,இந்திய இயற்கை உணவுகள்,என அடுத்த தலைமுறை அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களை காட்சி படுத்தினர்..

இதே போல வானியல் சாஸ்திரங்கள் தொடர்பான கிரகங்கள்,ராக்கெட் ஏவுதல்,சூரிய அறிவியல் குறித்த டெலஸ்கோப் பார்வை உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன..

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,தங்களது தனித்திறன்களை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் உதவியுடன் இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தனர்…

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *