பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே
மேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி ..
தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
மேலகபிஸ்தலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மக்கள் தளபதி ஜி. கே வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12,50,000 மதிப்பீட்டில் புதிய பொது விநியோக அங்காடியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ் மாநில காங்கிரசின் மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து அரிசி ,சீனி ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ, வட்டாரத் தலைவர் விவேக், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.டி. பாஸ்கர் , எஸ்.டி.ஜெயக்குமார், தாமரைச்செல்வன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.