பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

வலங்கைமான் அருகே சாத்தனூரில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி திருக்கோயில் சித்திரை திருவிழா …..
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்…..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அகோர வீரபத்திரர் சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.இதில் வீரபத்திரர் சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில்
முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன்,
சுவாமி ஊர்வலம் நடைப்பெற்று கோவிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து வீரபத்திரர் சுவாமிக்கு கோழி ஆடு என வீரபத்திர சாமிக்கு வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.அதனை தொடர்ந்து ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமிக்குசிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை சாத்தனூர் நாட்டாமை சண்முகம் மற்றும் கிராமவாசிகள் ,
நாட்டாமைகள் செய்திருந்தனர்.