எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே எடகுக்குடிவடபாதி நீர் உந்து நிலையத்திலிருந்து கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு. கீழச்சாலை முதல் நாங்கூர் வரை பயனற்று சாலை, வாய்க்கால் மற்றும் விளைநிலத்தில் செல்லும் குடிநீர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடலோர கிராமங்களான பெருந்தோட்டம்,கீழமூவர்கரை, நாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் உந்து நிலையத்திலிருந்து கடலோர கிராமங்களுக்கு செல்லும் பிரதான குழாய் பல இடங்ஙளில் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
குறிப்பாக கீழச்சாலை முதல் நாங்கூர் வரையிலான 2 கிமீ தொலைவில்ல் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பயனற்று சாலைகளிலும் அருகே உள்ள வாய்க்கால் மற்றும் விளைநிலங்களில் பயனற்று செல்கிறது. கோடை வெய்யில் வாட்டி உதைக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் என்று மக்கள் தவித்து வரும் சூழலில் இங்கு குடிநீர் பயனற்று வாய்க்காலில் செல்கிறது.
இதனால் விளைநிலங்கள் சேறும் சகதியாக புதர் மண்டி கிடப்பதால் நிலத்தை பயன்படுத்த முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே கீழச்சாலை முதல் நாங்கூர் வரையிலான கொள்ளிடம் கூட்டுகுடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைத்து தண்ணீர் பயனற்று வெறியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.