செங்குன்றம் செய்தியாளர்
அகில இந்திய இந்து சத்திய சேனா தமிழக இந்து பரிவார் சார்பில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த இந்து சொந்தங்களுக்கு வீரவணக்கம் மற்றும் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பகுதியில் உள்ள மலைக்கு ட்ரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர் .
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூர் பகுதியில் காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அகில இந்திய இந்து சத்திய சேனா தமிழக இந்து பரிவார் சார்பில் பஹல் காம் தாக்குதலில் உயிரிழந்த இந்து சொந்தங்களுக்கு இந்து பரிவார் தலைவர் வசந்த்குமார் ஜி தலைமையில் சிவகுமார் ,ஆவடி ஸ்டாலின் ,வினோத் குமார் ,டெல்லி கோபி ,மாடம்பாக்கம் செந்தில் , ஸ்ரீ ஹரி, ராமச்சந்திரன் மற்றும் பெண்கள் உட்பட பலர் மோட்ச தீபம் ஏற்றி வைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் கண்டன கோஷங்கள் எழுப்பி பாகிஸ்தானின் தேசிய
கொடியை தீயிட்டு எரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வசந்த் குமார் ஜி பேசும்போது….
தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்று உளவுத்துறை முதல் ரா வரை அனைவருக்கும் தெரியும் இவர்களை எல்லாம் தேடி நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் இந்தக் காவி மசூதியில் சென்று கண்டுபிடிக்கும்.என கூறினார்.