தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது. ஆர்பாட்டத்தில் அமைச்சரின் உருவ படத்திற்கு துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெண்களை இழிவாகவும் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் தொலை தொடர்பு அலுவலகம் அருகே பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொன்முடியின் உருவ படத்திற்கு துடைப்பம், செருப்பை கொண்டு தாக்கினர்.
அப்போது காவல் துறையினருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பொன்முடியின் உருவ படத்திற்கு துடைப்பத்தால் தாக்கும் போது காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீதும் துடைப்பத்தை கொண்டு பாஜகவினர் தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இந்த கண்ட ஆர்பட்டத்தில் தாய்மார்கள் சகோதரிகளிடம் பேச கூடாத வாய் கூசும் வார்த்தைகள் தான் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் இவருக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் ஆனால் கட்சியிலிருந்து மட்டுமே பதவி நீக்கி உள்ளார்.
அமைச்சர் பதவி நீக்கமால் உளளார் மேலும் அமைச்சர் பதவி பொறுப்பேற்கும் போது விருப்பு வெறுப்பு இல்லாமல் பணியாற்றுவேன் என உறுதிமொழி ஏற்று தற்போது பெண்களுக்கு எதிராக அருவெறுப்பாக பேசி வருகிறார்.
இந்த ஆர்பாட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி பெறாமல் ஆர்பாட்டம் செய்ததால் இந்த நகர செயலாளர் ஆறுமுகம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா பிரபாகரன். கணேசன், வெங்கட்ராஜ். பிரவீன் .மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்