கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வங்கியின் மேலாளர் ஜெ. சந்திர மெளலீஸ்வரன் உதவி மேலாளர்கள் வி. நடராஜ் நீராஜாஆர் நாயர் அசோசியேட் மேலாளர் செ .சோமநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் கம்பம் ரோகன் சேகர் சிறுநீரக மருத்துவ டாக்டர் என்பி சேகர் தலைமையில் செவிலியர்கள் ஆகியோர் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் சிறுநீரக பரிசோதனை செய்து அதற்கு தேவையான முதலுதவி ஆலோசனைகள் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் வங்கியின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகன் சேகர் சிறுநீரக மருத்துவமனை செய்தி மக்கள் தொடர்பாளர்கள் மணிவாசகம் வங்கி பணியாளர்கள் கார்த்திக் அர்ஜுனன் சரஸ்வதி மணிமாறன் அஜித் ஆகியோர் மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து முகாமில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்து அனுப்பினார்கள்.

Share this to your Friends