பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராட்டம் தமிழ்நாடு வெல்லும் என்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்
கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பரமத்தி தனராசு, கபிலர்மலை சண்முகம், எலச்சிபாளையம் தங்கவேல், மோகனூர் சண்முகம், பேரூர் கழகச் செயலாளர்கள் கருணாநிதி, ரமேஷ் பாபு, முருகவேல், ராமலிங்கம், பேரூராட்சித் தலைவர்கள் சோமசேகர், மணி, லட்சுமி முரளி, துணைத்தலைவர்கள் அன்பரசு, ராஜா மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூக்கடை சுந்தர் வேலூர் கழக அவைத் தலைவர் மதியழகன், வேலூர் பேரூர் கழக துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய பிரதிநிதி தமிழ்செல்வன், மாவட்ட பிரதிநிதி பிரதாப் சக்கரவர்த்தி, சௌந்தரராஜன், செந்தில்நாதன உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், தலைமை கழக பேச்சாளர் கோதை மதிவாணன், மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய காசிமுத்துமாணிக்கம் தென் மாநிலங்களில் சோதிக்க முடியாத மத்திய ஆளும் ஒன்றிய பாஜக சூழ்ச்சி செய்து தொகுதி மறுசீரமைப்பு என்ற சூழ்ச்சியால் தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைத்து நமது ஆதாரவு இன்றி மத்தியில் ஆட்சி செய்ய சதி திட்டம் தீட்டி வருகிறது. இதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் பயின்று உலக அளவில் பல்வேறு உயரிய, உட்சபட்ச பதவிகளில் இருப்பவர்கள் ஏராளம். குறிப்பாக நாட்டின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் வெங்கட்ராமன் கூகுள் சுந்தர் பிச்சை உள்ளிட்ட எண்ணற்றவர்கள் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழியில் பயின்றவர்கள். மத்திய அரசு மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணித்து நம் மொழியை அழிக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர் ஆரம்பத்தில் இருந்தே ஹிந்தி மொழியை ஹிந்தி மொழியால் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரம்பரிய மிக்க மொழிகள் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் தமிழ் ஆங்கிலம் பயின்ற நம் மக்கள் பல்வேறு உயரிய பதவிகள் உள்ள நிலையில் ஹிந்தியை பயின்ற வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பானி பூரியும் பான் மசாலாவும் விற்பனை செய்து வருகின்றனர்
இதேபோல் தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒன்றிய அரசு நிதி பகிரில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதற்கு இப்போது கூட்டம் வாயிலாக கடுமையான கண்டனத்தை தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது பாஜகவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஜெயசூர்யா அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக உலகிற்கே பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியும் மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட்ட நிதி வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை வகுத்து நல்லாட்சி செய்து வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை மீண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முடிவில் இந்த மாபெரும் கண்டன போராட்டத்திற்கு வருகை தந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைத்து துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.