அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை
மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் மதுரையில் கோரிப்பாளை யம் விக்டர் பாலம் அருகில் கள்ளழகர் வைகையில் இறங் கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் கலக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அவருடன் மாநில கவுரவ தலைவர் ராமன், தென்மண் டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், முல்லை /பெரியாறு, வைகை விவசாயி கள் சங்க செயலாளர் ஆதிமூ லம், மதுரை மாவட்ட தலை வர் அழகுசேர்வை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டி யன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மது ரையை மையமாக வைத்து புதிய வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இது வரை நிறைவேற்றப்படாதது, ஏமாற்றம் அளிக்கிறது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி,குளம், குட்டை களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் மாவட்ட கலெக்டர், வெளி மாநிலங் களுக்கு கனிமவளம் கடத்துவதற்கு ஆதரவாக லாரிகளை தடை செய்யக்கூடாது என காவல்துறைக்கு கடிதம் அளித்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
மதுரை மாநகரில் 72 இடங்களில் வைகை ஆற்றில் கழிவுநீர் முழுமையாக கலக்கிறது. இதனை தடுப்பதற்கு உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். வைகை, தாமிரபரணி, பேச்சிப்பாறை,பெருஞ்சானி உள்ளிட்ட நீர்ப்பாசன திட்ட பராமரிப்புக்கு 4 ஆண்டு காலமாக தி.மு.க. அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நெடுஞ்சாலை துறைக்கு கொடுக்கும் முன்னுரிமையை தமிழ்நாடு அரசு நீர்ப்பாசனத்துறைக்கு கொடுக்க முன்வரவில்லை என அவர் தெரிவித்தார்.