பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்
நவீன வேளாண் தொழில் நுட்பப் பரப்புரை

பெரம்பலூர்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், பரங்கிபேட்டையில் தங்கி தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக சேந்தரகிள்ளை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நவீன வேளாண் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சிகளை அளித்தனர்.

இந்த பயிற்சியில் 3ஜி கரைசல் தயாரிக்கும் முறை, தென்னை மரங்களுக்கு வேர் ஊட்டம் வழங்கும் நவீன முறை, அரப்பும் மோர் கலவையின் பயன்கள், பரண்மேல் ஆடு வளர்ப்பு நுட்பங்கள், மற்றும் பட்டா சிட்டா ஆன்லைனில் இணைப்பது எப்படி? என்ற தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள், இத்தகைய பயிற்சிகள் தங்களின் பண்ணை செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன என தெரிவித்தனர். மாணவிகளின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டினர்.

இந்த நிகழ்வின் மூலம், தொழில்நுட்பமான வேளாண்மையை எளிய முறையில் விவசாயிகள் இடையே கொண்டு சேர்க்கும் நோக்குடன் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் லிஷா, மாலினி, மேதினி, மேகனா, நந்தினி, நிலோபர்நிஷா, நிரஞ்சனா, நிஷாலினி ஆகியோர் செயல்பட்டனர்.

Share this to your Friends