பெரம்பலூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட, குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.இவர் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து தற்போது குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி கடந்த 2020 முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்
எனினும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்,மின்சார வாரியம்,குரும்பலூர் பேரூராட்சியில் உரிய அனுமதி பெற்றுள்ள இந்த ஆலைக்கான திறப்புவிழா இன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் கழிவுநீர் நிலத்தடி நீர் விவசாயத்தை பாதிப்பதாக கூறி ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் துறையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது