தருமபுரி மாவட்டம்
கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை

தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூரில உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்ததை, ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது இதில் புனித வியாழன், புனித வெள்ளியும் அடங்கும்.புனித வியாழனையொட்டி தருமபுரி அரூரில் கத்தோலிக்க ஆலயத்தில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாகும்.
இந்நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகள் நடைபெற்றன இந்நிகழ்வில் தூய இருதய ஆண்டவர் பங்கு தந்தை ஜான் மைக்கேல் 15 கிராமங்களை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
ஏராளமான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்