வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 2024-ல் பட்டபடிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான, கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா மூக்கப்பிள்ளை கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரிக்குழுச் செயலர் பொன். இரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிக்குழுத் தலைவர் பொறி.பொன். பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக, DST-SERB தேசிய தலைவர் புகழ்பெற்ற பேராசிரியர் மு. இலட்சுமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பெற்ற 25 மாணவ மாணவியர்களுக்கு பதக்கம், முதுகலை மற்றும் இளங்கலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 777 பேருக்கு பட்டம் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினரின் துணைவியார் லீலாமணி லட்சுமணன், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் அரு.லோகநாதன், தேன்மொழி தங்கராஜா, மாலா பாலசுப்பிரமணியன், சியாமளா இரவிச்சந்திரன்,முனைவர் சோம.இராசேந்திரன், முனைவர் பெ.நீலநாரயணன், துணை முதல்வர் முனைவர் குல.தி.தமிழ்மணி, சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.மீனாட்சிசுந்தரம்,தேர்வு நெறியாளர், முனைவர் ஆ.மேரிஅன்புமதி, கல்வி புலத்தலைவர் முனைவர் வெ.சாவித்திரி , உள்தர கட்டுப்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.சரவணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள்,மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.