புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்…
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் தமிழ் புத்தாண்டு அன்று திறந்து வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் சேர்மன் S.B.விஜய் அவர்கள் அளித்த பேட்டியில், உலக தரத்தில் ஒரு இந்திய செயலியை உருவாக்கி உள்ளோம் இதில் நமக்கு அன்றாடம் தேவையான A to z சர்வீஸ் ஐ பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது,இந்த செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் நமக்கு வெல்கம் போனசாக 300 Points கொடுக்கப்படுகிறது,
நம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து செயலிகளும் வெளிநாட்டு செயலிகளாக இருப்பதால் ஆண்டு ஒன்றுக்கு 750 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பணம் வெளிநாட்டுக்கு செல்கிறது நமது இந்திய பணம் இந்தியாவிலேயே சுழற்சி முறையில் இருந்தால் இந்தியாவின் முன்னேற்ற பாதை அதிகரிக்கும் எனவே இந்த செயலியை அணைத்து விதத்திலும் நாம் பயன்படுத்தும் பொழுது அது இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும்,
வேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ள அனைத்து சர்வீஸ் ப்ரொவைடர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்களின் வியாபாரத்தை அதிகப்படுத்துங்கள்,
அதிக வெளியூர் வாசி மக்கள் வந்து செல்லும் புதுச்சேரியில் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது புதுச்சேரியில் இந்த செயலியை அறிமுகப்படுத்தி அதை புதுச்சேரியில் இருந்து இந்தியா முழுவதும் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்,
பயனர்கள் தங்களுக்கு தேவையான எலக்ட்ரீசியன்,பிளம்பர், கார்பென்டர்,பெயிண்டர், ஏசி டெக்னீசியன், போன்ற அனைத்து வகையான சர்வீஸ் களையும் இதன் மூலம் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.மேலும் இதன் தொடர்ச்சியாக விதைத்தவனே இனி விலையும் சொல்வான்! என்ற நோக்கத்தில் விவசாயிகளும் தங்களது பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துவங்கியுள்ளோம்,
இவ்வாறு அந்நிறுவனத்தின் சேர்மன் S.B.விஜய் அவர்கள் கூறியிருந்தார்.