புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ‌.ரகமதுல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

சமீபத்தில், கொளத்தூரில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் அவர்கள் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் அறிவிப்பு செய்திருந்தார். திராவிட மாடல் ஆட்சியில் திருநர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம்.இதுதான் உண்மையான சமூகநீதி அரசு. பெரியார் அரசு என்று தெரிவித்திருந்தார்.

அதன்படியே , மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி மற்றும் நகர்புறங்களில் நியமன பதவி வழங்குவதற்கான சட்ட முன் வடிவை அறிமுக படுத்தியும், மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுள்ளது.

நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலர் பயன் அடைந்து வருகிறோம்.

அந்த வரிசையில் எங்களுக்கு மேலும் ஒரு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி எங்களையும் உள்ளாட்சி அமைப்புகளின் நியமன பிரதிநிதியாக நியமனம் செய்ய சட்ட முன் வடிவை அமல்படுத்தி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கனவை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களுக்கும், மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதா ஜீவன், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் அவர்களுக்கும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னதுரை உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *