கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 9842427520.
பெருஞ்சலங்கை ஆட்டத்துடன் தொடங்கிய அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்….
ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வே. கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 87 வதுஆண்டு விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம் உள்ளிட்டவைகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது.
அதேபோல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முன்னதாக சட்டமேதை அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், கே எஸ் கே பவுண்டேஷன் நிறுவனர் சம்பத் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.