டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டும், வந்தை மண்ணின் கால்பந்து வீரர்கள் புங்கம் கண்ணன் (முன்னாள் இந்திய கால்பந்துவீரர்)
மற்றும் பி.ஆர்.மணிமுத்து ஆகியோரின் நினைவு கோப்பை மாநில அளவிலான கால்பந்து போட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து 350 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்ட போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன்,
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வேல்முருகன்,சென்னை பச்சையப்பன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரி கால்பந்து பயிற்சியாளர் தியாகராஜன், பாடகர் கானா பாலா, வந்தவாசி அரசு பொது மருத்துவமனை தலைமை டாக்டர் சிவப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த போட்டியை வழக்கறிஞர் எஸ்.உதயசங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் வி.கிருபானந்தம், எஸ்.விக்ரம், பேராசிரியர் ரஜினி, சையத் அப்துல் அலீம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த போட்டியில் கோப்பையுடன் முதல் பரிசை சென்னை அணி ரூ50000 ம்,இரண்டாம் பரிசை வேலூர் அணி ரூபாய் 25000 ம் பெற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.