கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், செயலாளர் முகமது கமாலுதீன், இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், முகமதுஅமீன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன் சுரேஷ் செந்தில்ராஜா, வெங்கடேசன் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.
வருகிற மே மாதம் 22.05.2025 முதல் 27.05.2025 வரை 6 நாட்கள் 65 ஆம் ஆண்டு எல் ஆர் ஜி நாயுடு கோப்பைக்கான ஆண்கள் அகில இந்திய கூடைபந்து போட்டியும் மற்றும் 11 ஆம் ஆண்டு கே.வி.பிக்கான பெண்கள் அகில இந்திய கூடைபந்து போட்டியையும் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன. போட்டி நடைப்பெறும் நாட்களில் செல்பி ஸ்டேஜ் அமைப்பது. அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சில்வர் மெடல் வழங்குவது.
அதிக 3 புள்ளிகள் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் இருந்து தலா 4 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்குவது, என்ன தீர்மானிக்கப்பட்டது.