திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,
சுழலும் சொற்போர் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு புதிய பேருந்து நிலையப் பகுதி கழக தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர துணை செயலாளர் இளவரசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட துணை தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், மாவட்ட காப்பாளர் அய்யனார் ஆகியோர் தொடக்க உரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் உரிமை மீட்க. பண்பாட்டு படையெடுப்பை தகர்ப்போம் என்ற தலைப்பில் அன்பழகன், ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்துவோம் என்கின்ற தலைப்பில் வழக்கறிஞர் பூவை. புலிகேசி, திராவிட மாடல் ஆட்சியை காப்போம் என்கின்ற தலைப்பில் தலைமை கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன், ஆகியோர்கள் பேசினார்கள்.

நடுவராக மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் செயலாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், மாநில ஊடகப் பிரிவு தலைவர் அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாநில அமைப்பாளர் பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றி குமார், திராவிட மாணவர் கழகம் மாநில செயலாளர் செந்தூரப்பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

மாநகர தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாநகர செயலாளர் வீரக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். முடிவில் மாநகரத் துணைத் தலைவர் டேவிட் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *