தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு புதுவை அன்னலட்சுமி திருநங்கை சமூக அமைப்பு சார்பாக அரியாங்குப்பம் காமராஜ் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது

இதில் புதுச்சேரி திருநங்கை குழு தலைவி, திருமதி. கிரிஜா நாயக் அவர்கள் தலைமையில் அபயம் தொண்டு நிறுவனர் சுந்தர முருகன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக அமைப்பாக திரு, பாஸ்கர் (எ ) தட்சிணாமூர்த்தி, MLA அவர்கள் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி திருநங்கைகளின் சேவையை பாராட்டி பேசினார்,

பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி சார்பாக தலைவர். பூரணாங்குப்பம் பனை ஆனந்தன், அவர்கள்,துணைத் தலைவர் வண்டிமுத்து ஆகியோர் திருநங்கைகளுக்கு வாழ்த்துக் கூறி மின்விசிறி பரிசாக வழங்கினர். இதில் முன்னாள் கலை பயன்பாடு துறை இயக்குனர் திரு. கலியபெருமாள் அவர்கள், சொல்லாய்வுச் செல்வர் புலவர்.வேல்முருகன் அவர்கள், சமூக சேவகர் முன்னாள் ராணுவ வீரர் திரு.பாக்கியராஜ் அவர்கள், சமூக சேவகி ஜெயந்தி அவர்கள் தன்னுரிமை கழக தலைவர் திரு. சடகோபன் உட்பட சமூக அமைப்பினர் கலந்து கொண்டு திருநங்கை அனைவரையும் வாழ்த்தி சிறப்பு செய்தனர் இதில் திருநங்கைகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பின்னர் துப்புரவு பணியாளர்கள் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.