எண்ணூர் எர்ணாவூர் காமராஜ் நகரில் அருள்மிகு திருமுருக திருக்கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது
மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பிக்கப்பட்டு புதிய கோபுர கலசங்கள் வைக்கப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு அறங்காவலர் குழு தலைவர் செல்லம் மற்றும் ஆலய அறங்காவலர் பாஸ்கர் மற்றும் அறங்காவல அதிகாரி காஞ்சனா ஸ்ரீதர் மற்றும் ஆலய அர்ச்சகர் நாகராஜன் திருமுருக பக்த ஜன சபா நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் குடமுழுக்கு நன்னீராட்டு பெரு விழா மிக விமர்சையாக நடைபெற்றது
அருள்மிகு திருமுருகர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரம் வேண்டி வருவோருக் கெல்லாம் வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக அருள் பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு திருமுருக திருக்கோவில் நேற்று காலை 15 ஆம் தேதி கணபதி பூஜை கோ பூஜை நவகிரக பூஜை உடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு விநாயகர் முருகன் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாக கூட்டம் அமைத்து முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை என யாகசாலையில் யாக பூஜைகள் மிக விமர்சையாக நடைபெற்ற நிலையில்
இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சீர்வரிசையுடன் பூரணதி ஊர்வலமாக கொண்டு பட்டு கார்த்திகேய குருக்கள் மற்றும் சதீஷ் சர்மா குருக்கள் முன்னிலையில் யாக குண்டத்தில் பூரணாதி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு துவங்கி திருமுருக ஆலய கோபுர கலசத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலவர் பெருமான் சமேத வள்ளி தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கோபுர கலசத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்து கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக விவரிசையாக நடைபெற்று
இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 3000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாதி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புனித நீரானது தெளிக்கப்பட்டு ஓம் முருகா அரோகரா என்ற கோஷங்களுடன் குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது
பின்னர் சிறப்பு அலங்காரம் தூப தீப ஆராதனை மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இந்த குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருமுருக பக்த ஜனா சபா சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது