குமரகுரு நிறுவனங்களின் பால் பண்ணை யாத்திரை – கற்றல் மற்றும் உத்வேகத்திற்கான முதல்-வகையான பயணம்

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் இருந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பின்பற்றப்படும் பால் பண்ணை தொடர்பான சிறப்பான நடைமுறைகள் பற்றி இத்துறை சார்ந்த தொழில்முனைவோர் அறிந்துகொள்ள ‘பால் பண்ணை யாத்திரை’ என்ற கற்றல் பயணம் கோவையில் இருந்து துவங்கியது.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி’ அமைப்பு உடன் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ‘ஸ்மார்ட் பால் பண்ணை’ தொழில்முனைவோர்களை மேம்பாட்டுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த யாத்திரை துவங்கியது.

இந்த யாத்திரையின் கீழ், 40க்கும் மேற்பட்ட பால் பண்ணை தொழில்முனைவோர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 6,000 கி.மீ.க்கும் மேற்பட்ட தூரம் பயணம் செய்து பால் பண்ணையில் முன்னணி கண்டுபிடிப்புகளை ஆராய்கின்றனர். இதில் 15 முதன்மையான பால் பண்ணைகள், புதுமை மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வருகைகள் அடங்கும். இந்த திட்டம் மூலம் 150 மணி நேரத்திற்கும் மேலான ஆழமான, நிஜ உலக கற்றல் அனுபவம் தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கும்.

இந்த பயணத்தை குமரகுரு கல்வி நிறுவனங்களின் ப்ரெசிடெண்ட் சங்கர் வானவராயர், ரேஸ் கோர்ஸில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தியா பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஆனால் உற்பத்தித்திறனில் பின்தங்கியுள்ளது.இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் என்ற பெருமையை கொண்டுள்ளது. இது, லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் மற்றும் அவர்களின் கால்நடைகளின் அயராத உழைப்பின் விளைவாகும். எனினும், இந்த சாதனையின் மறுபக்கமாக, உற்பத்தித்திறன் என்ற பெரிய சவால் உள்ளது.

இந்திய கால்நடைகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கால்நடைகளுடன் ஒப்பிடும்போது பத்தில் ஒரு பங்கு பாலே உற்பத்தி செய்கின்றன.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் Environmental Defense Fund (EDF) நடத்திய கூட்டு ஆய்வில், தமிழ்நாட்டின் பால் துறையின் முக்கிய சவால்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அதிக உற்பத்தி செலவு, பாலுக்கு குறைந்த விலை, கால்நடை மருத்துவ சேவைகள் போன்றவை மூக்கையா காரணிகளாகும்.

மார்ச் 2024-ல், குமரகுரு நிறுவனங்கள் “காலநிலை-சார்ந்த பால் துறை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை” தொடங்கின.

இந்த திட்டம், வெறும் பால் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கவில்லை. மாறாக, அதை அறிவார்ந்த, நிலைத்தன்மை கொண்ட மற்றும் விவசாயிகளின் கண்ணியத்துடன் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், 112 பால் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு பயிற்சி மற்றும் இன்குபேஷன் அளிக்கப்பட்டது.

அவர்கள் கால்நடை வளர்ப்பு, ஊட்டச்சத்து, கால்நடை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் பால் மதிப்பு கூட்டுதல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றனர்.

ஒவ்வொரு தொழில் முனைவோரும் 9 மாத கூடுதல் வழிகாட்டுதல் பெறுவார்கள், இது மூலம் அவர்கள் 10,000-க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளை பயிற்றுவிக்கும் திறன் பெறுவார்கள்.

“டேரி யாத்திரை” – கற்றல் மற்றும் ஈடுபாட்டின் புதிய பயணம்!

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, குமரகுரு நிறுவனங்கள் “டேரி யாத்திரை” என்ற ஒரு புரட்சிகரமான கற்றல் முகாமைத் தொடங்கியுள்ளது. 

40-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், 5 மாநிலங்களில் (தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான்) 6,000 கிமீ-க்கும் மேல் பயணித்து, பால் வளர்ப்புத் துறையின் முன்னணி கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளனர்.

கோயம்புத்தூரின் பசுமையான புல்வெளிகளிலிருந்து ராஜஸ்தானின் வறண்ட பாலைவனங்கள் வரை, இந்த யாத்திரை இந்தியாவின் பல்வேறு பால் துறை சூழலை ஒன்றிணைக்கிறது.

இந்த யாத்திரையில், 15 முன்னணி பால் பண்ணைகள், கண்டுபிடிப்பு மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது 150+ மணிநேர நடைமுறை கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

டேரி யாத்திரை – ஒரு பயணம் மட்டுமல்ல, ஒரு இயக்கம்!

இந்த முயற்சி, இந்தியாவில் பால் வளர்ப்பு எப்படி அணுகப்பட வேண்டும் என்பதை மீண்டும் வரையறுக்கிறது.

இது பால் வளர்ப்பை வாழ்வாதாரம் மட்டுமல்ல, காலநிலை-எதிர்ப்பு, அறிவு மற்றும் கண்ணியம் கொண்ட ஒரு தொழிலாக மாற்றுகிறது.

இந்தியா பால் உற்பத்தியில் உலகை வழிநடத்தலாம். ஆனால் உண்மையான வெற்றி, விவசாயிகளின் வளம், கால்நடைகளின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும்போது தான் கிடைக்கும்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *