தேனி அருகே வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசும்போது இன்றைய போட்டிச் சூழலில் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பட்டமளித்தல் மாணவர்கள் மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் இத்தகைய உடனடி செயல்பாடுகள் கல்வி சார் சிறப்பையும் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் உங்களுடைய இத்தனை வருட கடின உழைப்பிற்காக இன்று பட்டம் பெற உள்ளீர்கள் இது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவு மற்றும் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்
எனவே ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து பட்டம் பெற உள்ள உங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் உங்களின் பெற்றோர் ஆசிரியர் மற்றும் நண்பர்களின் ஆதரவில் இந்த நிலையை அடைந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
நானும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தான் படித்தேன் நாம் எங்கு படித்தோம் என்பதை விட எப்படி படித்தோம் என்பதே முக்கியம் நமது இலக்கை அடைவதற்கு எந்த பிரிவில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தோடு முயற்சி செய்தால் எந்ததுறையிலும் வெற்றி பெறலாம் தற்பொழுது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்களின் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து கவனச் சிதறல் இல்லாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவி