தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு மாரியம்மன் கோவில் வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது, இந்தக் திருக்கோயிலில் இந்த ஆண்டு பூச்சாட்டு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், 15.04.2025 அன்று தாராபுரம் நாயுடு சமுதாயம் சார்பாக அதிகாலை ஆறு மணி அளவில் மேற்கு பஜனைமட த் தெருவில் உள்ள மடத்திலிருந்து மேளதாளத்துடன் துவங்கி சோளக்கடைவீதியில் அமைந்துள்ள நாயுடு சமுதாய சத்திரத்திற்கு வந்தது. அங்கு பூஜை தொடங்கி சோளக்கடை வீதியிலிருந்து ஐந்து முக்கு சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றங்கரைக்கு சென்றது.
அங்கு 40 பக்தர்கள் தீர்த்தக் குடங்களும் மற்றும் 20 பக்தர்கள் பால்குடங்களும் எடுத்து மீண்டும் அதே வழியாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேலும் மாரியம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோவிலில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் பெற்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றனர்,
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் நாயுடு சமுதாய சங்கத்தின் தலைவர் விஜயராகவன், உப தலைவர் சீதாபதி, செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் கனகராஜ், நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாயுடு சமுதாய பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். இரவு முக்கிய தெருக்களின் வழியாக மாரியம்மன் திருஉலா வந்ததுடன் கட்டளை சிறப்பாக நடைபெற்றது.