பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறைகளாக வசித்து வருகின்றன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக முதல்வர் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரியும் பாபநாசத்தில் இருந்து மூன்று தலைமுறைகளாக நத்தம் புறம்போக்கில் குடியிருக்கும் கிராம மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராமவாசிகள் சண்முகம் மற்றும் ஷபானா தலைமையில் 100 மேற்பட்ட கிராம மக்கள் வேனில் அணிவகுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்க சென்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மேற்கண்ட போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுவிடும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.