
தமிழ் புத்தாண்டு விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் சினி வினோத் தலைமையிலும், தலைவர் அப்துல் ஜப்பார் முன்னிலையிலும் அரசியல் பிரமுகர், சமூக சேவகர், நடிகர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார், அரசியல் பிரமுகி, சமூக சேவகியான மலர்விழி, திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், பூமிராஜன், தெப்பக்குளம் வினோத், வீரா, பொண்ணுபாண்டி, ஜெயபால், மணி, பாலாஜி, பாடகி ஜோதி, வைசாலி, புனிதா, தேவி மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.