கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 470 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் பேசுகையில், இதுவரையில் 1,210 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டம் வீடு கட்டுவதற்கு வொர்க் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது, சுமார் 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகள் முடிக்க முடிக்க பணம் உங்களுக்கு சட்ட திட்டத்தின் படி முறையாக வழங்கப்படும் மேலும் யாராவது உங்களிடத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் ஒரு படி மேலே போய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்,கட்சி நிர்வாகிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு கூட அனுப்பப்படும் என பயனாளிகள் மத்தியில் பரபரப்பாக பேசினார். சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேசியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார்,துணைத்தலைவர் தனம் சக்திவேல்,ஒன்றிய செயலாளர்கள் பூமாரி கிருஷ்ணமூர்த்தி, எம் ராஜேந்திரன்,எஸ் அய்யனார், இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா,உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பயனாளிகள்,திமுக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.